தட்டாஞ்சாவடி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சேது வீடு வீடாக தீவிர ஓட்டு வேட்டை
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் K. சேது (எ) சேதுசெல்வம் தொகுதியில் வீடு வீடாக நடந்து சென்று கொளுத்தும் வெயிலையும் பாராமல் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் அவருக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டு வருவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். தொகுதி மக்கள் நலனுக்காக இரவு, பகல் பாராது வாக்கு கேட்டு செல்கிறார். சேதுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர், திமுக வினர், விசிக வினர், மதிமுக வினர் மற்றும் பலர் சென்று கொண்டிருக்கின்றனர்.