புதுநகர் அங்காளபரமேசுவரி அம்மன்                                               மயானக்கொள்ளை    

   

படத்தில் விழாக்குழுவினர், ஜிடிஎம் குரூப்ஸ்


புதுச்சேரி வில்லியனுார் கணுவாப்பேட்டை புதுநகர், 2-வது பிளாட் ஓடைத் தெரு அருள்மிகு தேவி ஸ்ரீ  அங்காளபரமேசுவரி  அம்மன் 11-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா கோட்டைமேடு மயானத்தில் சிறப்பாக நடைபெற்றது. முன் நாள்  கூழ்வார்த்தல் விழா, இரண களிப்பு உற்சவம் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மின்விளக்கு அலங்காரத்துடன் அம்மன் வீதியுலாக்காட்சி நடைபெற்றது. 
   அப்போது வழிநெடுகிலும் அனைத்து வீடுகளிலும் அம்மனுக்கு கற்பூர தீபாராதனை காட்டி பய பக்தியுடன் அம்மனை வணங்கினர். ஏற்பாடுகளை தணிகாசலம் மற்றும் விழாக்குழுவினர், ஜிடிஎம் குரூப்ஸ், பொது மக்கள் செய்திருந்தனர்.